ADDED : ஜன 27, 2013 05:25 PM

* வள்ளலாரின் நிஜப்பெயர் ராமலிங்க அடிகளார். அவரது மாணவர் தொழூர் வேலாயுதம், ஒளியான அருளைத் தரும் வள்ளல் என்ற பொருளில், 'திருஅருள்பிரகாச வள்ளலார்' என தன் குருவைக் குறிப்பிட்டார். இதன்பிறகே 'வள்ளலார்' என்ற பெயர் ஏற்பட்டது.
* வள்ளலாரின் உண்மையான படம் எடுக்கப்பட்டதில்லை. திருக்காப்பிட்ட அறையில் ஜோதி தேகத்துடன் கூடிய அவர், வெள்ளை வஸ்திரம் அணிந்திருந்ததை கருத்தில் கொண்டு, தற்போதிருக்கும் படம் வெளியிடப்பட்டது.
* வடலூர் ஞானசபை ஜோதி தரிசனத்தின் போது வள்ளலார் கூறிய மந்திரமான, 'அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி' எனச்சொல்லி இங்கு வழிபடுவது விசேஷம்.
* மனிதன் தினமும் 21 ஆயிரத்து 600 முறை சுவாசிப்பதன் அடிப்படையில் சத்திய ஞான சபையைச் சுற்றிலும் இதே எண்ணிக்கை யில், கண்ணிகள் தொடுக்கப்பட்ட சங்கிலி கட்டப்பட்டுள்ளது.
* இங்கு ஏற்றப்படும் அனைத்து தீபங்களுக்கும், தேங்காய் எண்ணெய் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

