ADDED : ஜன 27, 2013 05:25 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வள்ளலாருக்கு தூக்கம் என்பது மிக மிக குறைவு. அவர் தினமும் இரவில் ஒரு மணிநேரம் மட்டுமே தூங்குவார். இரவில் விளக்கில்லாத அறையில் இருக்கக்கூடாது என்பது அவரது கொள்கை. அவரது அறையில் அகல்விளக்கு ஒன்று எரிந்து கொண்டே இருக்கும். அதற்கு தேவையான எண்ணெய்யை ஒரு கலத்தில் வைத்திருப்பார்கள். எண்ணெய் குறைய குறைய வள்ளலார் அதிலிருந்து விளக்கில் ஊற்றிக் கொள்வார். விடிய விடிய அவர் எழுதிக்கொண்டே இருப்பார்.

