
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'' நல்லக விளக்கது நமச்சிவாயவே'' என்று சிவனைத் தேவாரம் போற்றுகிறது. கார்த்திகை மாதம் முழுவதும் வாசலில் விளக்கேற்றுவர். ஐப்பசியில் தீபாவளியை ஒளித்திருநாளாகக் கொண்டாடினாலும், தமிழகத்தின் தீபாவளியாக இருப்பது திருக்கார்த்திகை தான். பஞ்சபூதங்களில் அக்னி தத்துவமாகத் திகழும் தலம் திருவண்ணாமலை. நெருப்பைப் போல சிவந்த நிறம் கொண்டதால் இறைவனுக்கு 'சிவன்' என்ற பெயர் ஏற்பட்டது. திருமாலும், நான்முகனும் அடிமுடி காண முடியாத நெருப்பாக இறைவன் காட்சியளித்ததும், உமையவளுக்கு இடப்பாகத்தை தந்ததும் இந்நாளில் தான். தாழ்த்திப் பிடித்தாலும்,மேல்நோக்கி எரிவது நெருப்பின் இயல்பு. அதுபோல, வாழ்ந்தாலும், தாழ்ந்தாலும் மனதால் உயர்ந்த மாமனிதனாக வாழவேண்டும் என்பதே தீபத்திருவிழாவின் நோக்கம்.