ADDED : நவ 26, 2012 11:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவண்ணாமலையில் மலை தீபம் ஏற்றும்போது பக்தர்கள் 'அண்ணாமலைக்கு அரோகரா' என்று கோஷமிடுவர். நாம் வீட்டில் விளக்கேற்றும் போதும், அண்ணாமலையை மனதில் சிந்தித்தபடி விளக்கேற்ற வேண்டும். திருவிளக்கு குறித்த பாடல்களைப் பாராயணம் செய்ய வேண்டும். கார்த்திகை பொரி உருண்டை, பிடி கொழுக்கட்டை, பழம், கல்கண்டு, பால் நிவேதனம் செய்யலாம். இம்முறையில் வழிபட்டால் அண்ணாமலையார் நம் வீட்டுபூஜைக்கு எழுந்தருள்வார்.