நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காட்டுக்கு செல்லும் வழியில் கங்கையைக் கடக்க குகன் என்னும் படகோட்டி ராமருக்கு உதவினான். அவனுக்கு கூலி கொடுத்தார் ராமர். அதை வாங்க மறுத்து, “ராமா! ஒரே தொழில் செய்பவர்கள் தங்களுக்குள் கூலி வாங்குவது முறையா?” என்றான்.
“எனக்கு படகு ஓட்டத் தெரியாதே” என்றார் ராமர்.
“ராமா! இந்த கங்கையாற்றைக் கடக்கும் படகு தான் என்னிடம் இருக்கிறது. நீங்களோ 'பிறவி' என்னும் பெருங்கடலையே கடக்க உதவும் படகாக இருக்கிறீர்கள். இப்போது சொல்லுங்கள். நீங்களும் படகோட்டி தானே!”
இதைக் கேட்ட ராமர் வாயடைத்து நின்றார்.