sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

திருநாங்கூர் 11 கருட சேவை

/

திருநாங்கூர் 11 கருட சேவை

திருநாங்கூர் 11 கருட சேவை

திருநாங்கூர் 11 கருட சேவை


ADDED : பிப் 13, 2021 03:56 PM

Google News

ADDED : பிப் 13, 2021 03:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெருமாளின் திவ்யதேசங்கள் 108. இதில் 11 கோயில்கள் ஒரே ஊரில் இருக்கிறது என்றால் ஆச்சரியம் தானே! அந்த பெருமைக்குரிய ஊர் மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள திருநாங்கூர். இங்கு திருக்காவளம்பாடி, திருஅரிமேய விண்ணகரம், திருவண் புருடோத்தமம், திருச்செம்பொன்கோவில், திருமணிமாடக்கோவில், திருவைகுந்த விண்ணகரம் என்னும் ஆறு திவ்யதேசங்கள் ஊருக்குள்ளேயே அமைந்துள்ளன. ஊரைச் சுற்றி திருத்தேவனார் தொகை, திருத்தெற்றியம்பலம், திருமணிக்கூடம், திருவெள்ளக்குளம், திருப்பார்த்தன்பள்ளி ஆகிய ஐந்து கோயில்கள் உள்ளன. இவற்றை திருநாங்கூர் 11 திவ்யதேசங்கள் என்பர்.

தட்சனின் யாகத்தை தடுக்கச் சென்ற, சிவபெருமான் மனைவி தாட்சாயிணியை அவளது தந்தை அவமானப்படுத்தினான். கோபமடைந்த சிவன் ருத்ர தாண்டவம் ஆடினார். சிவனின் ஜடாமுடி அவிழ்ந்து, முடி தரையில் படும் போதெல்லாம் அதிலிருந்து ருத்ரமூர்த்திகள் வெளிவந்தனர். இப்படி 11 ருத்ரர்கள் வெளி வரவே, தேவர்கள் திருமாலைச் சரணடைந்தனர். திருமால் 11 வடிவங்கள் எடுத்து அவர்களைச் சாந்தப்படுத்தினார். பெருமாளின் 11 வடிவங்களுமே 'உபய காவேரி மத்திமம்' என்ற புராணப் பெயர் பெற்ற திருநாங்கூரில் கோயில் கொண்டுள்ளனர்.

ஆண்டுதோறும் தை அமாவாசைக்கு மறுநாள் 11 திவ்யதேச பெருமாள்களும் திருநாங்கூரில் கூடுவர். அப்போது திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் (பாடுதல்) நிகழ்ச்சி நடக்கும். அதன் பின் மணவாள மாமுனிகள், திருமங்கையாழ்வாருக்கு மங்களாசாசனம் செய்யும் நிகழ்ச்சி நடக்கும்.






      Dinamalar
      Follow us