ADDED : ஏப் 24, 2021 01:30 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வால்மீகி ராமாயணம், வியாசரின் மகாபாரதம், சுகபிரம்மத்தின் பாகவதம் ஆகியவற்றில் அழகர்கோவிலின் பெருமை கூறப்பட்டுள்ளது. சித்ரகூட மலையில் ராமர், லட்சுமணர், சீதை தங்கியிருந்த பகுதி அழகர்மலையை ஒத்திருந்ததாக வால்மீகியின் குறிப்பு உள்ளது. பாண்டவர்களில் தர்மர் அழகர்மலைக்கு தீர்த்தயாத்திரை வந்ததாக வியாசர் கூறியுள்ளார். பலராமர் பாண்டிய தேசத்தில் உள்ள விருஷபாத்ரி (அழகர்மலை) மலையை தரிசித்து விட்டு சேதுக்கரைக்குப் புறப்பட்டதாக பாகவதம் கூறுகிறது. இந்த மலையைத் தரிசித்தவர்கள் வாஜபேய யாகம் செய்த புண்ணியம் அடைவர் என நாரதர் கூறியதாக மகாபாரதம் தெரிவிக்கிறது.