
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி மாவட்டத்தில் செல்லமாகவும், கோபமாகவும் பயன்படுத்தப்படும் வார்த்தை 'ஏலே'. ஸ்ரீவில்லிப்புத்தூர் ஒரு காலத்தில் திருநெல்வேலியை சார்ந்தே இருந்தது. இதன் காரணமாக 'ஏலே' என்ற வார்த்தை இங்கும் பயன்படுத்தப்பட்டது. ஆண்டாள் காலத்தில் இந்த வார்த்தை 'எல்லே' என்று இருந்தது. திருப்பாவையில் 'எல்லே இளங்கிளியே இன்னும் உறங்குதியோ?' என தோழியைப் பார்த்து கேட்கிறாள் ஆண்டாள். 'எல்லே' என்ற வார்த்தையே திரிந்து 'ஏலே' ஆனதாகச் சொல்வர்.

