ADDED : நவ 13, 2013 02:43 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சபரிமலையில் ஐயப்பனுக்கு மட்டுமின்றி மாளிகைப்புறத்தம்மனுக்கும் ஆபரணங்கள் கொண்டு வரப்படும். ஐயப்பனுக்கு திருவாபரணம் சாத்தப்பட்டு பூஜை நடக்கும்போது, மாளிகைப்புறத்தம்மனுக்கும் பூஜை நடத்தப்படும். மகரஜோதி விழா முடிந்தபிறகும், சபரிமலையில் ஆறு நாட்கள் நடை திறக்கப்பட்டிருக்கும். இந்த ஆறு நாட்களிலும் நடக்கும் விழாவின் கதாநாயகி மாளிகைப்புறத்தம்மன் தான். இவள் ஐயப்பனை திருமணம் செய்யவேண்டும் என்ற ஆவலுடன் சரங்குத்தி வரை பவனி வருவாள்.

