ADDED : நவ 13, 2013 02:42 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சபரிமலைக்கு சென்றபிறகு பதினெட்டு படிகளில் ஏற வேண்டும் என்ற ஆவலில், பம்பை நதிக்கரையிலேயே சிலர் கட்டு கட்டி அப்படியே மலை ஏறுகிறார்கள். இவர்கள் விரதம் எதுவும் இருப்பதில்லை. மேலும், இவர்களால் பதினெட்டாம்படியில் கூட்டம் அலை மோதுகிறது. விரதமிருந்து வரும் பக்தர்களுக்கும் இடையூறாக உள்ளது. முறையாக விரதமிருந்து குருசாமி அல்லது கோயில் அர்ச்சகர் மூலம் மாலை அணிந்து தான், கன்னி சுவாமிகள் மலைக்குச் செல்ல வேண்டும். பம்பைக்கு சென்றபிறகு மாலை அணிந்து மலை ஏறுவது பாவமாகும். முன்னதாகவே மலைக்குச் செல்பவர்கள், ஊர் திரும்பிய பிறகும், மகரவிளக்கு காலம் முடியும் வரை தொடர்ந்து விரதம் அனுஷ்டிக்க வேண்டும்.

