ADDED : நவ 18, 2016 12:00 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி அருகிலுள்ள தேவனாம்பாளையம் அம்மணீஸ்வரர் கோவிலில் ஒரே கருவறைக்குள் மூன்று லிங்கங்கள் உள்ளன. இவற்றை மும்மூர்த்திகளாக கருதி பூஜை செய்கிறார்கள். மேற்கு நோக்கி அமைந்த தலம் இது. தனது கற்பை சோதிக்க வந்த மும்மூர்த்திகளை, குழந்தைகளாக மாற்றி பாலூட்டினாள் அத்திரி முனிவரின் மனைவியான அனுசூயா. இந்த சம்பவத்தின் அடிப்படையில் இத்தலம் எழுப்பப்பட்டதால், மூன்று தெய்வங்களையும் லிங்க வடிவமாக பிரதிஷ்டை செய்து விட்டனர். இப்பகுதியில் ஓடும் கற்பக நதியின் மத்தியிலுள்ள பாறையில் கோவில் அமைந்துள்ளது. மழைக்காலங்களில் இந்த நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். அப்போது, கோவிலுக்கு செல்ல முடியாது. ஆடி, ஐப்பசி, மாசி மாதங்களில் மாலை நேரத்தில், நடுவில் உள்ள சிவலிங்கத்தின் மீது மட்டும் சூரிய ஒளி விழும்.

