நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவபெருமான் ரூபம் (உருவம்), அரூபம் (உருவமில்லாதது), அருவுருவம் (உருவமும் உருவமற்ற நிலையும் கடந்த லிங்க வடிவம்) என மூன்று வடிவங்களில் காட்சி தருகிறார். இம்மூன்று வடிவிலும் சிவனை, சிதம்பரம் நடராஜர் கோவிலில் தரிசிக்கலாம். ரூபம் என்பது நடராஜரையும், அருவுருவம் என்பது பிரதான மூலஸ்தானத்தில் லிங்க வடிவிலுள்ள மூலட்டானேஸ்வரரையும், அரூபம் என்பது வடிவமில்லாத ஆகாயத்தையும் குறிக்கும்.

