ADDED : செப் 02, 2012 12:37 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை கூடலழகர்கோயில், திருமோகூர் காளமேகப்பெருமாள் கோயில்களில் சைவ வழிபாட்டுக்குரிய நவக்கிரக சந்நிதி உள்ளது. சுப்ரபாதத்தின் 18வது ஸ்லோகத்தில், ''ஸ்ரீவெங்டேசா! சூரியன் முதலான கிரகங்கள் உனது தாமரை போன்ற சிவந்த திருவடிக்கு தொண்டுசெய்யக் காத்திருக்கின்றன. அதனால் இந்த அதிகாலைப் பொழுதில் எழுந்தருள்வாயாக,'' என கூறப்பட்டுள்ளது. வேதாந்ததேசிகன் பாதுகா ஸ்லோகத்தில், நவக்கிரகங்கள் ஒன்பதும் பெருமாளின் பாதுகைக்கு அழகு செய்வதாகப் பாடியுள்ளார். எனவே, முற்பிறவிகளில் செய்த பாவபுண்ணியத்திற்கேற்ப இன்பதுன்பத்தை கிரகங்கள் வழங்கினாலும், திருமாலைச் சரணடைந்தால் அவை நம்மை ஒன்றும் செய்யாது என்பர்.

