நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மார்கழி நோன்பிருந்த ஆண்டாள், திருப்பாவை எனும் பிரபந்தம் பாடினாள். 30 பாசுரங்கள் இதில் உள்ளன. அதிகாலையில் கண்ணனை தரிசிக்கச் செல்லும் ஆண்டாள் தோழியர்களை எழுப்பும் நோக்கத்தில் இப்பாடல்கள் இருக்கும். ஆண்டாள் தன் தோழியரை எழுப்பும் சிற்பங்கள் ஸ்ரீவில்லிபுத்துார் கோயில், சன்னதி விமானத்தில் உள்ளன. இதற்கு, 'திருப்பாவை விமானம்' என்றே பெயர். ஆண்டாளை தரிசிப்பவர்கள் இந்த விமானத்தை அவசியம் தரிசிக்க வேண்டும்.

