
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிளி சொன்னதை திரும்பிச் சொல்லும் தன்மையுடையது. கண்ணனை மணக்க விரும்பிய தகவலை சொல்வதற்காக கிளியை துாது அனுப்பினாள் ஆண்டாள். தனக்கு உதவி செய்த கிளியை நன்றியுடன் தன் இடக்கையில் எப்போதும் ஆண்டாள் தாங்கி நிற்கிறாள். ஸ்ரீவில்லிபுத்துாரில் ஆண்டாள் கையில் வைப்பதற்காக தினமும் இலைகளால் கிளி செய்யப்படுகிறது. மாலை நேர பூஜையின்போது ஆண்டாள் கையில் கிளி வைக்கப்படுகிறது. மறுநாள் காலை வரை கிளியுடன் இருப்பாள். பின்னர் இது பக்தர்களுக்கு வழங்கப்படும். மரவள்ளிக்கிழங்கு இலையை உடல் பகுதியாகவும், மாதுளம் பிஞ்சினை அலகு, இலையை இறகு, காக்காப்பொன் கண்ணாகவும் வைத்து, வாழை நாரில் இணைத்து கிளியை தயாரிக்கின்றனர்.

