
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முன்னோர் வழிபாடு மகத்தான ஒன்று. இதற்கு உகந்த நாள் அமாவாசை. அந்நாளில் முன்னோரை நினைத்து செய்யும் தர்ப்பணம் குலம், குடும்பத்தை தழைத்தோங்கச் செய்யும். அதிலும் ஆடி அமாவாசை முக்கியத்துவம் பெறுகிறது.
இந்நாளில் நதி, குளம், கடல் என நீர் நிலையில் நீராடி முன்னோருக்கு தர்ப்பணம் செய்யலாம். பின் தானம் அளித்தால் பல நன்மைகள் கிடைக்கும். முன்னோரது ஆசியையும் பெறலாம்.

