நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணருக்கு 'திரிபங்கி' என்று பெயர் உண்டு. இதற்கு காரணம் என்ன தெரியுமா... அவர் வளைந்து நிற்கும் தோற்றத்தின் அடிப்படையில் இப்பெயர் வந்தது. ஒரு பாதத்தை நேரே வைத்து, மறு பாதத்தை மாற்றி வைத்திருப்பது ஒரு வளைவு. இடுப்பை வளைத்து நிற்பது மற்றொன்று. கழுத்தைச் சாய்த்து புல்லாங்குழல் கொண்டு ஊதுவது மூன்றாவது வளைவு. இப்படி நிற்பதனால் கிருஷ்ணரை 'திரிபங்கி லலிதாகாரன்' என்று வடமொழி பாடல்கள் போற்றுகின்றன. இந்த வளைவுகள் முப்பொருளாகிய அறம், பொருள், இன்பத்தை குறிக்கின்றன.

