ADDED : மார் 18, 2021 05:21 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவன் கோயிலில் கருவறைக்கு நுழையும் முன் கவனித்தால், துவாரபாலகர் இருவர் நிற்பதைக் காணலாம். இவர்களை ஆட்கொண்டார், உய்யக்கொண்டார் என்று சொல்வர். ஆட்கொண்டார் ஆள் காட்டி விரலை மட்டும் நீட்டிய படி நின்றிருப்பார். சிவன் ஒருவரே முழுமுதல் கடவுள் என்பதை இவரது நீட்டிய விரல் குறிப்பிடுகிறது. மற்றொருவரான உய்யக்கொண்டார் கையை விரித்துக் காட்டியபடி இருப்பார். இதன் மூலம் சிவனைத் தவிர வேறு யாரையும் சரணடையத் தேவையில்லை என்பதை உணர்த்துகிறார். இந்த உண்மையை ஜாடையாக காட்டும் இவர்கள் நமக்காகவே கோயிலில் காத்துக் கிடக்கின்றனர்.