ADDED : மார் 18, 2021 05:21 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல் என்னும் மூலப்பொருளில் இருந்து பெறப்படுவது பொரி. வெள்ளை நிறமும், உள்ளே வெற்றிடமும், குறைந்த எடையும் கொண்ட இது காற்றில் பறக்கும். மிகவும் லேசானதாக இருந்தாலும் நைவேத்யம் மூலம் கடவுளை அடைந்து விடுகிறது. ஆனால் மனபலம், உடல் பலம் மிக்க மனிதன் ஆறறிவு இருந்தும் கடவுளை அடைய முயற்சி செய்வதில்லை. லேசான பொரி போல மனதில் எழும் தீயஆசைகளை அடக்கி, அதன் நிறம் போல வெள்ளை மனதுடன் செயல்பட்டால் நாமும் எளிதாக கடவுளை அடையலாம்.