ADDED : ஜூலை 24, 2020 09:19 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சன்னதி எதிரில் கருடாழ்வார் 25 அடி உயரத்தில் விஸ்வரூபமாக காட்சியளிக்கிறார். எட்டு நாகங்களை ஆபரணமாக அணிந்துள்ள இவர், சிறகுகளை விரித்து கிளம்பத் தயாரான நிலையில் இருக்கிறார். இவருக்கு 30 மீட்டர் நீளத்தில் வேட்டி அணிவிக்கின்றனர். அபிஷேகம் கிடையாது. வியாழக்கிழமைகளில் கொழுக்கட்டை நைவேத்யம் செய்வர். சுக்ரீவனும், அங்கதனும் இவருக்கு துவார பாலகர்களாக காவல் புரிகின்றனர். மார்கழி திருவாதிரையன்று திருநட்சத்திர விழா நடத்துகின்றனர்.