ADDED : ஜூன் 21, 2022 12:07 PM

விளக்கேற்றும் எண்ணெய் தயாரிப்புக்கு என்றே சில விதிமுறைகள் முன்பு இருந்துள்ளன. எண்ணெய்க்கு தேவையான மூலப்பொருட்களை விளைவிக்கவே, பல ஏக்கர் நிலங்களை கோயில்களுக்கு எழுதி வைத்துள்ளனர் அரசர்கள். தீபமேற்றி வழிபடுவது ஹிந்துக்களின் வழக்கம். தீபம் ஏற்ற குறிப்பிட்ட வகை எண்ணெய்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இன்றைய காலத்தில் சிலர் இதை பின்பற்றுவதில்லை. இதனால் பல பிரச்னைகளுக்கு ஆளாகின்றனர். இனியாவது விளக்கேற்ற எந்த எண்ணெய் உகந்தது என்பதை தெரிந்து கொள்வோம்.
பசு நெய் - லட்சுமி கடாட்சம் உண்டாகும். அஷ்ட லட்சுமிக்கு உகந்தது.
நல்லெண்ணெய் - கிரக தோஷம் போக்கும். பைரவர், காவல் தெய்வங்களுக்கு ஏற்றது.
ஆமணக்கு எண்ணெய் - மன அமைதி, தம்பதி இடையே ஒற்றுமை ஓங்கும். தட்சிணாமூர்த்திக்கு உகந்தது.
இலுப்பை எண்ணெய் - கடன் தொல்லை அகலும். அம்மன், குலதெய்வத்திற்கு ஏற்றது.
புங்க எண்ணெய் - குழந்தைப்பேறு கிடைக்கும், திருமணத்தடை, சர்ப்பதோஷம் விலகும். நாக தெய்வத்திற்கு உகந்தது.
வேப்ப எண்ணெய் - எதிரி தொல்லை நீங்கும். வழக்குகளில் வெற்றி கிட்டும். காளி, வாராகி அம்மனுக்கு ஏற்றது.
தேங்காய் எண்ணெய் - கண் திருஷ்டி நீங்கும், வியாபாரம் செழிக்கும். விநாயகருக்கு ஏற்றது.
சந்தனாதி தைலம் - செல்வம் பெருகும். குபேரன் அருள் கிடைக்கும்.
சூரியகாந்தி, கடலை, கடுகு எண்ணெய், பாமாயில் பயன்படுத்த கூடாது. கடலை எண்ணெயில் விளக்கேற்ற கூடாது என ஆதிசங்கரரும் சொல்லியுள்ளார். இதை பின்பற்றுங்கள். உங்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் காத்திருக்கு.

