ADDED : பிப் 22, 2022 12:41 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாங்கல்யம் தந்துனானேன
மமஜீவன ஹேதுநா!
கண்டே பத்நாமி ஸுபகே
த்வம ஜீவ சரதஸ்சதம்!!
இது தாலிகட்டும் நேரத்தில் சொல்லும் மந்திரம். இதன் பொருள் புரிந்தால் மணவாழ்வின் மகத்துவம் புரியும்.
“மங்கலகரமானவளே! உன்னோடு இல்லற வாழ்வு நல்ல முறையில் நடத்த வேண்டும் என்பதற்காக இந்த திருமாங்கல்யத்தை கழுத்தில் அணிவிக்கிறேன். என்
மனைவியாக என்னுடைய சுக துக்கங்களில் பங்கு கொள்பவளாக சுபயோகங்களுடன் நுாறாண்டு காலம் வாழ்க!” என்பதே பொருள்.
இந்தக் கருத்தை உணர்ந்து மணமகனும் தாலிகட்டினால் மணவாழ்க்கை இனிமையாக அமையும்.

