ADDED : பிப் 25, 2022 09:30 AM

பூலோகத்தில் உயிர்களைப் படைத்து முடித்ததும், சிவனும் பார்வதியும் கயிலாயமலை திரும்பினர். அப்போது தேவி சிவனிடம், ''உங்களை வழிபடுவதற்கு உகந்த நாள் எது'' என்று கேட்டாள்.
''மாசி மாத தேய்பிறை 14ம்நாளான சதுர்த்தசியே (அமாவாசைக்கு முந்திய நாள்) எனக்கு பிரியமானது. அந்த நாளே மகாசிவராத்திரி. அன்று உபவாசம் இருப்பது சிறப்பு. அன்று சிவன் கோயில்களில் மாலை 6:00, இரவு 9:00, நள்ளிரவு 12:00, 3:00 மணிக்கு முறையே முதல், இரண்டாம், மூன்றாம், நான்காம் கால பூஜைகள் நடக்கும்.
வாசனைமலர், அலங்காரம் இவற்றை விட வில்வார்ச்சனையே பூஜைக்கு ஏற்றது.
நான்கு காலங்களில் முறையே பால், தயிர், வெண்ணெய், தேன் ஆகியவற்றால் அபிஷேகம் செய்ய வேண்டும்.
இந்த விரதத்தின் பெருமையை வேறு எந்த விரதத்தோடும் ஒப்பிட முடியாது” என்றார்.
சிவபெருமானின் விருப்பமறிந்த தேவி, தன் தோழியரிடம் இதை தெரிவித்தாள். அவர்கள் பூலோகவாசிகளிடம் எடுத்துக்கூற எல்லா கோயில்களிலும் சிவராத்திரியன்று பூஜை நடத்த தொடங்கினர்.

