sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

மரத்தடியில் தெய்வங்கள் இருப்பது ஏன்?

/

மரத்தடியில் தெய்வங்கள் இருப்பது ஏன்?

மரத்தடியில் தெய்வங்கள் இருப்பது ஏன்?

மரத்தடியில் தெய்வங்கள் இருப்பது ஏன்?


ADDED : டிச 03, 2012 12:51 PM

Google News

ADDED : டிச 03, 2012 12:51 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரசமரம், வேப்பமரம் இரண்டுக்கும் கீழே விநாயகர் மற்றும் நாகர் சிலைகளைப் பிரதிஷ்டை செய்வது வழக்கமாக இருக்கிறது. இதன் ரகசியம் என்ன தெரியுமா?

மழை பெய்தாலும், நல்ல வெயில் அடித்தாலும் குடை தேவைப்படுகிறது. பனிக்காலத்தில் இளவெயிலாக இருக்கும். அப்போது குடை தேவையில்லை. அரசமரத்திலும், வேப்பமரத்திலும் மழை மற்றும் கோடை காலத்தில் இலைகள் நெருக்கமாக இருக்கும். தன் கீழே பிரதிஷ்டை செய்யப்படும் பிள்ளையாரையும், நாகராஜாவையும் அவை குடை போல இலைகளை விரித்து பாதுகாப்பதாக ஐதீகம். இயற்கையும் இறைவனை வணங்குகிறது என்பது இதன் ரகசியம்.

பனிக்காலத்தில் மரங்கள் இலைகளை உதிர்த்து விட்டு கட்டைகளுடன் நிற்கும். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, சூரியன் தன் கதிர்களை இந்த இடைவெளி வழியே பாய்ச்சி, விநாயகரையும், நாகரையும் வழிபடுவான். அதுமட்டுமல்ல! வெயில், மழை காலத்தில் மரத்துக்கு கீழே மனிதர்கள் ஒதுங்குவார்கள். அப்போது அவர்கள் மழை, வெயிலில் இருந்து பெருமளவு பாதுகாக்கப்படுவார்கள். பனிக்காலத்தில் இளவெயில் பட்டால் தான் உடலுக்கு உஷ்ணம் கிடைக்கும். இப்படி, சீதோஷ்ண நிலையால் மனிதன் கஷ்டப்பட்டு விடக்கூடாது என்ற கருணையுடன், தெய்வங்கள் மரத்தடிகளை தங்கள் இருப்பிடமாக்கிக் கொண்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us