ADDED : நவ 04, 2011 12:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'தாய்க்குப் பின் மனைவி' என்றே சொல்லியிருக்கலாமே! ஏன் 'தாரம்' என்ற வார்த்தையைப் பயன்படுத்தினர் என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. 'தாரம்' என்றால் 'மகிழ்ச்சி'. தாய்க்குப் பின் மகிழ்ச்சியைத் தருபவள் மனைவி என்பதே இதன் பொருள். ஆன்மிகத்திலும் ஒரு 'தாரம்' இருக்கிறது. அது என்ன தெரியுமா? மந்திர சாஸ்திரத்தில் 'ஓம்' என்னும் பிரணவ மந்திரத்தை 'தாரம்' என அழைப்பர். அதாவது, இந்த மந்திரத்தை உச்சரிப்போர், பிறவி என்னும் தளையில் இருந்து மீண்டு பிறப்பற்ற நிலை என்னும் முக்தியை அடைவர். ஆன்மிகத்தில் முக்தியே உயர்ந்த சந்தோஷமாகும்.