
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாழ்க்கையில் மனிதன் பல கஷ்டங்களை அனுபவிக்கிறான். தன்னைச் சுற்றியுள்ள சிலரிடம் மனதில் உள்ளதைச் சொல்லி ஆறுதல் தேட முயற்சிக்கலாம். ஆனால் அந்த சிலர் நம்பிக்கைக்கு உரியவராக இருப்பார்களா என்பது சந்தேகமே. ஆனால் கலியுகத்தின் கண் கண்ட தெய்வமான கந்தசுவாமி கருணையுடன் நம் குறைகளைக் கேட்பவராக இருக்கிறார். அவரது சன்னதி முன் அமர்ந்து கண்ணீர் விட்டால் மனச்சுமை குறையும். காவடி என்பது தோளில் சுமக்கப்படும் சுமை. கோயிலுக்கு செல்லும் வரை வழியெங்கும் 'அரோகரா' என்று கோஷமிட்டு கடைசியில் கோயிலில் காவடியை இறக்கி வைக்கும் போது, மனச்சுமையும் இறங்கி விடும்.