sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

கிருஷ்ணர் பிறந்தது எதற்காக!

/

கிருஷ்ணர் பிறந்தது எதற்காக!

கிருஷ்ணர் பிறந்தது எதற்காக!

கிருஷ்ணர் பிறந்தது எதற்காக!


ADDED : ஆக 19, 2016 02:08 PM

Google News

ADDED : ஆக 19, 2016 02:08 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பகவான் வைகுண்டத்தில் இருந்து கொண்டே இந்த உலக சாம்ராஜ்யத்தை நடத்தலாம். ஆனால், அவரைத் தட்டிக் கேட்கும் தைரியம் உலகில் சிலருக்கு வந்து விடுகிறது. அந்த சிலர் தான், அவர் மேல் உயிரையே வைத்திருக்கும் பக்தர்களும், ஜீவராசிகளும். தனது பக்தனான பிரகலாதன் கஷ்டப்பட்டான் என்பதற்காக நரசிம்மமாய் வந்தார். தேவர்கள் கஷ்டப்பட்டதற்காக மகாபலியை ஒடுக்க வாமனனாய் அவதரித்தார். ராவணனை அடக்க ராமனாய் பிறந்தார். அதுபோல் உலகில் தர்மத்தை நிலைநாட்ட கிருஷ்ணனாய் வந்தார்.

இந்த அவதார காலங்களில் தான் சாமான்யர்களுடன் இறைவனால் கலந்திருக்க முடிகிறது. சுலபமாய் எல்லாராலும் பார்க்க முடிகிறது. அவரது கருணையை நேரடியாக உணர முடிகிறது. கிருஷ்ணாவதாரத்தில் திரவுபதியின் துயில் உரிந்த போது அவளைப் பாதுகாத்தது, நல்லவனாய் இருந்தாலும் கெட்டவர்களுடன் சேர்ந்த குற்றத்திற்காக தர்மம் தவறாமல் கர்ணனை அழித்தது, கெட்டவர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய சகுனி, துரியோதனன் போன்றவர்களை வதைத்தது ஆகியவற்றை மக்களால் நேரில் காண முடிந்தது.

கடவுள் மீது பயம் வந்தது. நல்லதைச் செய்தால் தான் ஆண்டவனின் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியும் என்ற எண்ணம் ஏற்பட்டது. இதுவே கிருஷ்ணாவதாரத்தின் ரகசியம்.






      Dinamalar
      Follow us