ADDED : ஜன 04, 2016 09:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* கைமாறு கருதாமல் பிறரின் துன்பம் போக்க உதவுங்கள். இதுவே ஈகை, அறம், தர்மம், கடமை எனப்படுகிறது.
* உடலை வசப்படுத்தாவிட்டால் உலக வாழ்க்கையே துன்பமாக மாறி விடும்.
* பொய்யான நடிப்பையும், முகஸ்துதியாக பேசுவதையும் பொருட்படுத்தக் கூடாது. ஆனால், இப்படிப்பட்டவர்களையே தலையில் தூக்கி வைத்து உலகம் கொண்டாடுகிறது.
* கவலை, பயம் என்னும் இரு நாய்களுக்கு உள்ளத்தை இரையாக்குவது மடத்தனம். எப்போதும் மனதில் சந்தோஷம் குடியிருக்கட்டும்.
-பாரதியார்