sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பாரதியார்

/

இறைவனுக்கு நன்றி!

/

இறைவனுக்கு நன்றி!

இறைவனுக்கு நன்றி!

இறைவனுக்கு நன்றி!


ADDED : மே 20, 2010 04:05 PM

Google News

ADDED : மே 20, 2010 04:05 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* இறைவா! அறிவையும், அறிவின்மையையும் ஒன்றாக இணைத்து உலகத்தில் உயிர்களை உண்டாக்கியவரே!. நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் பஞ்சபூதங்களைப் படைத்தவரே! இந்த உலகத்தை அழகுப்படைப்புகளால் நிறைத்தாய். பக்தி என்னும் அரிய நிலையைக் கொடுத்திருக்கிறாய். பரம்பொருளே! பக்தியால் உன்னை அறியும் சக்தியையும் கொடுத்துள்ளாய்.

* பக்தியால் இவ்வுலகில் பலவித மேன்மைகளைப் பெறும் பாக்கியம் தந்தாய். மனதை தெளிவாக்கி, செய்யும் செயல்களில் செம்மையைத் தந்தாய். நெஞ்சில் சஞ்சலம் நீங்கி மகிழ்ச்சி வந்ததும் பக்தியால் தான்.

* பொய்ச்சுகங்களை விட்டு உண்மை இன்பத்தை உணரச் செய்தாய். தீமையைக் கண்டு அஞ்சாமல் எதிர்த்துப் போரிடும் வீரத்தைத் தந்தாய். உடம்பில் தோன்றிய பிணிகளைப் போக்கி அருள் செய்தாய்.

* உன்னருளால், குன்றினைப் போல இருதோள்களும் சக்தி பெற்றுள்ளன. இதனால் தீமைகளை எதிர்க்கும் சக்தி கிடைத்திருக்கிறது. இதனால் வெற்றியை மட்டுமே எப்போதும் சுவைக்கிறேன். வெற்றிக் களிப்பில் பயம் என்பதும் அற்றுப் போனது. இதற்காக உனக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

-பாரதியார்



Trending





      Dinamalar
      Follow us