sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பாரதியார்

/

கருணைக் கணபதியே வருக!

/

கருணைக் கணபதியே வருக!

கருணைக் கணபதியே வருக!

கருணைக் கணபதியே வருக!


ADDED : மே 28, 2012 03:05 PM

Google News

ADDED : மே 28, 2012 03:05 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கற்பகக்கடவுளே! கருணைக் கணபதியே! இந்த உலகம் முழுவதையும் ஆட்சி செய்பவனே! வேண்டும் வரம் அருள்பவனே! செய்யும் தொழில் யாவும் சிறப்புடன் திகழ்ந்திடச் செய்திடுவாய்.

* தாமரை ஆசனத்தில் அமர்ந்திருக்கும் ஆனைமுகத்தானே! உன் திருவடியையே சரணம் என்று அடைக்கலம் அடைந்து விட்டேன்.

* வாழ்வில் பல குற்றங்குறைகளைச் செய்துவிட்டு உன் திருவடியை இப்போது நாடி வந்திருக்கிறேன். என் பிழைகளைப் பொறுத்துக் காத்தருள வேண்டும்.

* சந்திரனைச் சூடியிருக்கும் ஈசன்மகனே! உன்னைப் பணிந்தவர்க்கு அச்சம் நீங்கி மனதில் தைரியம் உருவாகும்.

* மனதில் தோன்றும் சலனங்களைப் போக்கி எப்போதும் மவுனத்தில் நிலைக்கச் செய்திடுவாய். உன் காலைப் பிடிக்கிறேன். கருணை புரிவாயாக.

* விநாயகனே! மற்றவர் துன்பம் போக்குதல், பிறர் நலனுக்கு வழிகாட்டுதல் ஆகிய கடமைகளைச் செய்ய துணை நிற்க வேண்டும்.

* வேதம் போற்றும் விமலனே! உலகில் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வழிகாட்டவேண்டும்.

- பாரதியார்



Trending





      Dinamalar
      Follow us