ADDED : டிச 01, 2013 10:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* தர்மவழியில் நடந்து வருபவனை மனிதன் என்பதை விட, கடவுள் என்றே சொல்ல வேண்டும்.
* கை பிடித்த மனைவியின் மனம் கொதிக்கும் விதத்தில் நடந்து கொள்ளக் கூடாது. அத்தகையவன் வீட்டில், லட்சுமிதேவி கால் வைக்க விரும்ப மாட்டாள்.
* பொறுமையில்லாதவன் வாழ்வில் இன்பத்தை அடைய முடியாது. பொறுமையை வளர்த்தால் உலக விஷயங்களில் வெற்றி அடைவது உறுதி.
* புராணங்களைக் கேட்டுப் பயனடையுங்கள். அவற்றை வேதங்களாக நினைத்து மடமை பேசி விலங்கு போல நடந்து கொள்ளாதீர்கள்.
* யாருக்கும் எதற்கும் அஞ்சாத மன உறுதி வேண்டும். மன தைரியத்தைக் காட்டிலும் சிறந்த புண்ணியம் இந்த மண்ணிலும் இல்லை. விண்ணிலும் இல்லை.
- பாரதியார்