ADDED : ஜூன் 27, 2009 09:17 AM

* ஒரு விஷயத்தில் தன்னைக் காட்டிலும் தணிந்து குறைவுடையவனாக இருப் பவன் எப்போதும் தணிவாகவே இருப் பான் என்று நினைப்பவன் மூடன்.

* தியானத்தின் சக்தியை எளிதாக யாரும் நினைக்காதீர்கள். மனிதன் தான் விரும்பும் படியாகும் வல்லமையைத் தியானத்தால் பெறலாம்.

* தன்னைத் தானே ஆளவேண்டும். தன்னைத் தானே அறிய வேண்டும். தன்னைத் தானே காக்க வேண்டும். தன்னைத் தானே உயர்த்த வேண்டும்.

* எந்தத் திறமை இருந்தாலும் அதில் தொடர்ந்த பயிற்சியும் முயற்சியும் வேண்டும். பழக்கத்தில் இல்லாத திறமை இழந்து விடப்படும்.

* தீ என்பது தவக்கடவுள். தெய்வீகமாகிய அறிவுத் துணிவும் தீ எனப்படும். எண்ணிய யாவும் கைகூடச் செய்யும் தீக்கடவுளை போற்றி வணங்குவோம்.

* ஒருவருக்கு தீமை செய்தால் அதற்கான பயன் நம்மைத் தொடர்ந்து வரும். இன்பத்தை விரும்புபவன் தீயசெயல்களைச் செய்ய விரும்ப மாட்டான்.

* நம்பிக்கையைக் கைவிடாமல் தொடர்ந்து முயற்சி செய்பவனுக்கு உதவிகள் தாமாகவே கிடைக்கும். எப்போதும் நமக்குத் துணை நாமே.