ADDED : ஜூன் 20, 2009 05:25 PM

* பராசக்தியைப் பாடுவோம். எங்கிருந்து அவள் தோன்றினாள் என்று ஆராய்ந் தால் அது நம் அறிவுக்கு எட்டாத தாகும். அவள் தானாகவே பிறந்த தாய்.
* வாழ்க்கையின் பயன் இன்பம் பெறுத லாகும். வாழ்தல் என்பது சக்தியைப் போற்றுவதாகும். நமக்கு வாழ்வு தந்தவள் சக்தி. நம்மை வாழச் செய்த அந்த தேவியை வாழ்த்தி வணங்குவோம்.
* உள்ளம் தெளிந்திருக்க உடல் அமைதியும் வலிமையும் பெற்றிருக்க உயிர் துடிப்புடன் இருக்க மகாசக்தியின் அருள் பெறுவோம். வாழ்க்கையின் பயன் சக்தியைப் போற்றுவதேயாகும். சக்தியைப் போற்றினால் இன்பம் யாவும் பெற்று வாழலாம்.
* பராசக்தியின் பொருட்டு எடுத்த இவ்வுடலை எத்துன்பம் வருத்தினாலும், அவள் திருவடிகளில் சரணடைவோம். அப்போது ஒளியாக நம் அகக்கண்ணில் தோன்றி வாழ்வைத் துலங்கச் செய்வாள்.
* நாம் அனைவரும் தேவியின் கருவிகளாகப் படைக்கப் பட்டிருக்கிறோம். பாணன் ஒருவன் பல கருவிகளை இசைத்து மகிழ்வது போல, தோற்றத்தில் பலவாக நின் றாலும் உலகவுயிர்கள் அனைத்திலும் ஒரே சக்தியே விளையாடுகின்றது. - பாரதியார்