ADDED : மார் 21, 2013 05:03 PM

* வெளிச்சத்தில் இருக்கிறேன் என்று சொல்லி கொண்டு தன் சகோதரனைப் பகைக்கிறவன், இன்னும் இருளிலேயே இருக்கின்றவன் தான்.
* எவன் தன் நாவை அடக்காமல் தன் இருதயத்தை ஏமாற்றிக் கொண்டு தன்னை பக்திமான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறானோ அவனுடைய பக்தி வியர்த்தமானது.
* மனத்திருப்தியோடு கூடிய பக்தியே மிகுந்த ஆதாயமுள்ளது.
* நேர்மையாளனைக் கடவுள் பரிசோதிக்கிறார். ஆனால், துன்மார்க்கனையும் மூர்க்கத்தனத்தில் மோகமுள்ளவனையுமோ அவருடைய உள்ளம் வெறுக்கிறது.
* கடவுளின் வாக்குதத்தத்தின் பிரகாரம், நீதி வாழ்கிற புதிய பூமி உண்டாகுமென காத்திருக்கிறோம்.
* நேர்மையாளனுக்கு வெளிச்சமும் செம்மையாக நிமிர்ந்த நெஞ்சினருக்காக உற்சாகமும் விதைக்கப்பட்டிருக்கின்றன.
* நீதியின் பாதையில் தான் ஜீவன் உண்டு. ஆதலின் அப்பாதையின் எந்தப்புறமும் மரணம் இல்லை.
- பைபிள் பொன்மொழிகள்