
* அறிவின் முதற்படி செல்வத்தைப் புறக்கணிப்பதாகும். அன்பின் ஆரம்பம் செல்வத்தை பலருக்கும் கொடுத்து மகிழ்வதாகும்.
* செல்வம் உள்ள காலத்திலேயே தர்மம் செய்து விடுங்கள். இல்லாவிட்டால் அது நம்மை விட்டு விலகிச் சென்று விடும்.
* உள்ளத்தில் உள்ளதை உதட்டில் வெளிப்படுத்துங்கள். இல்லாவிட்டால் மவுனத்தைக் கடைபிடியுங்கள்.
* ஆயிரம் வீண்வார்த்தைகளை விட, கேட்பவர்களுக்கு இதம் தரும் ஒரு நல்ல வார்த்தை மேலானது.
* பயனில்லாத சொற்களைப் பேசுபவன் மணம் இல்லாத மலருக்கு ஒப்பானவன்.
* கேள்விப்பட்டதை எல்லாம் கண் மூடித்தனமாக நம்பி விடாதீர்கள். அதிலிருக்கும் உண்மையை அறிய முற்படுங்கள்.
* ஆயிரம் ஸ்லோகங்களை அர்த்தமில்லாமல் உச்சரிப்பதைக் காட்டிலும், தர்மசிந்தனையூட்டும் ஒரு பாடலை பாடுவது அமைதியைக் கொடுக்கும்.
* விடுதலைக்குரிய வழியை அடைய பிறரை எதிர்பார்க்காதீர்கள். அது உங்களிடமே உள்ளது.
- புத்தர்