ADDED : ஏப் 24, 2016 04:04 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* புண்ணியமே சுக வாழ்விற்கு விதை போன்றது. வாய்ப்பு கிடைத்தால் அதை நட்டு வையுங்கள்.
* முகமலர்ச்சியுடன் இனிய சொற்களைப் பேசுவோரின் நட்பை உலகமே விரும்பி நிற்கும்.
* நல்லோரின் அறிவுரையை ஏற்று நடப்பவன் வாழ்வில் தீமை சிறிதும் அணுகுவதில்லை.
* தர்மவழியில் நடப்பவர்களே உயர்ந்தவர்கள். அவர்களால் உலகம் மேன்மை அடையும்.
* யாருக்கும் தீங்கு இல்லாமல் நன்மை ஏற்படுவதற்கு பொய் சொல்வது குற்றமாகாது.
* உண்மை, பொறுமை, நேர்மை கொண்டவர்கள் சொல்லும் வார்த்தைகள் அப்படியே பலிக்கும்.
- ஜெயேந்திரர்