sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

ஆன்மிகம்

ஆன்மிக சிந்தனைகள்

காஞ்சி பெரியவர்

பிற உலகத்தவருக்கும் சேவை

பிற உலகத்தவருக்கும் சேவை

பிற உலகத்தவருக்கும் சேவை

பிற உலகத்தவருக்கும் சேவை

ADDED : டிச 24, 2008 06:28 PM

Google News

ADDED : டிச 24, 2008 06:28 PM

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* மனிதனாகப் பிறந்தவனுக்கு வாழ்வில் உண்டாகும் பாக்கியங்களிலேயே மேலான பாக்கியம் பிறருக்குச் சேவை செய்வதே. சேவை என்றால் என்னவென்று தெரியாமல், அவரவரும் தமது குடும்பத்திற்காக மட்டுமே சேவை செய்கிறோம். அதோடு, நமக்கு சம்பந்தம் இல்லாத பிறருக்கும் முடிந்த சேவைகளைச் செய்ய வேண்டும்.
* சமைப்பதற்காக பானையில் அரிசி போடும் போது, பகவானை நினைத்துக் கொண்டு ஏழைகளுக்கு என்று ஒருபிடி அரிசியை ஒரு கலயத்தில் போட்டு விட வேண்டும். இதை மொத்தமாக ஒருநாளில் சேகரித்து, சமைத்து அந்தந்த பகுதி கோவில்களில் ஏழைகளுக்கு அன்னமிட வேண்டும்.
* தினமும் ஒரு பசுமாட்டுக்காவது ஒரு கைப்பிடி புல்லோ அல்லது அகத்திக்கீரையோ கொடுக்க வேண்டும்.
* பொதுமக்களுக்காக கிணறு, குளம் வெட்டுவது, அன்னதானம் செய்வது, ஆத்ம ஷேமத்திற்காக கோவில் கட்டுவது, பூஜைக்காக நந்தவனம் அமைப்பது போன்றவையும் தர்மங்களே.
* யாகம், யக்ஞம், தர்ப்பணம், திவசம் முதலிய இந்த உலகம் மட்டுமின்றி மற்ற உலகங்களில் இருப்பவர்களுக்கும் நம் சேவையை செய்ய வேண்டியது நம் தர்மமாகும்.

Trending

Dinamalar
Follow us