
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* மனிதனுக்கு மட்டுமே சிரிக்கத் தெரியும். மனம் விட்டுச் சிரித்தால் நோய் விலகும். * பயன் அளிக்கும் எந்த தொழிலிலும் ஈடுபடலாம். ஆனால் பிறரிடம் கைநீட்டி பிழைப்பது மட்டும் கூடாது. * பாவம், புண்ணியம் இரண்டும் செயலைப் பொறுத்தது அல்ல. எண்ணத்தைப் பொறுத்தது. * கடவுளை வழிபடுவதைக் காட்டிலும் ஏழைக்குச் செய்யும் உதவியே மேலானது. * உள்ளத்தின் கண்ணாடி கண். பார்வையை வைத்தே ஒருவரின் உள்ளத்தை அளந்து விட முடியும். * தனக்கு மட்டுமில்லாமல் பிறருக்கும் பயனுள்ள விதத்தில் வாழ்பவனே நல்ல மனிதன். -வாரியார்