sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

கிருபானந்த வாரியார்

/

கனவிலும் நினைக்கக்கூடாதது

/

கனவிலும் நினைக்கக்கூடாதது

கனவிலும் நினைக்கக்கூடாதது

கனவிலும் நினைக்கக்கூடாதது


ADDED : மே 14, 2008 07:27 PM

Google News

ADDED : மே 14, 2008 07:27 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

<P>முதுமைக்கு வேண்டியவற்றை இளமையில் தேட வேண்டும். மறுமைக்கு வேண்டியவற்றை இம்மையில் தேடவேண்டும். மரணபயம் தலைக்கு மேல் இருக்கின்றது. எந்தக்கணத்திலும் அது வரலாம். மேலே எறிந்த கல் எவ்வாறு கீழே விழுவது உறுதியோ, அதுபோல உடம்பெடுத்த நாம் மரணமடைவது உறுதி.ஒரு மனிதனுக்கு மரணம் எப்போது வேண்டுமானாலும் வரலாம். யாருக்கு எப்போது வரும் என்று யாõராலும் கணிக்க இயலாது. அது எந்த வினாடியும் வரும். எனவே, நல்ல அறங்களை செய்து நற்கதி தேடுவதே நல்லது. செல்வம் அழியாமல் இருக்க, ஏழைகள் மனம்நொந்து கண்ணீர் விடும்படியான பாவசெயல்களை செய்தல் கூடாது. பிறருடைய பொருள் உங்களுக்கு வரவேண்டுமென்று கனவிலும் நினைக்க கூடாது. நியாயமற்ற வழியில் பொருள் தேடக்கூடாது. இந்த உடம்பு நமக்கு இறைவன் கொடுத்த வாடகை வண்டி. இதில் ஏறி, நாம் பிரயாணம் செய்கிறோம். ஒரு குறிப்பிட்ட காலத்தை கடவுள் நமக்கு அளவிட்டுக் கொடுத்துள்ளார். அக்கால எல்லைக்குள் நாம் பிறவாநிலையாகிய முக்தியுலகை நாடிப் பிரயாணம் புரிய வேண்டும். அதற்கு ஒரே வழி யாருக்கும் தீங்கிழைக்காமல் இருப்பதே ஆகும். நல்ல உணவை உண்டால் உடல் வளரும். நல்ல நூல்களை படிப்பதனால் நல்லுணர்வு வளரும். நல்ல உள்ளத்துடன் எப்போதும் இறைவனை சிந்தித்தால் உயிர் வளரும். </P>



Trending





      Dinamalar
      Follow us