ADDED : மே 20, 2016 03:05 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* பிறந்த மண்ணை நேசியுங்கள். நாட்டிற்காகத் தியாகம் செய்யவும் தயாராக இருங்கள்.
* வாழ்வில் ஒழுக்கமும், கட்டுப்பாடும் உருவாகி விட்டால் அது சமுதாயம் முழுவதும் பிரதிபலிக்கும்.
* தர்மபலமே நிஜபலம். சத்திய பலமே சரீர பலம் என்று சொல்வார்கள். தர்மத்தையும், சத்தியத்தையும் வாழ்வில் பின்பற்றுங்கள்.
* உணவிலும், உடையிலும் எளிமையைக் கடைபிடியுங்கள். பேச்சிலும் இனிமையும், மென்மையும் கலந்திருக்கட்டும்.
- சாய்பாபா