
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* சத்தியம் இருக்குமிடத்தில் எல்லா நற்குணங்களும் இருக்கும். சத்தியமும் கடவுளும் வெவ்வேறானதல்ல.
* பிறர் நம்மை துன்புறுத்தும் போது, பழிக்குப் பழி வாங்க வேண்டும் என நினைப்பது நல்ல பண்பு ஆகாது.
* உலகில் நீ ஒரு வழிப்போக்கன். இந்த உண்மையை உணர்ந்தால் மனம் நல்வழியில் திரும்பி விடும்.
* கடவுள் சர்வாதிகாரியோ, கொடுங்கோலனோ அல்ல. அன்பு வடிவான நம் தாய் போன்றவர்.
* நல்லதை மட்டுமே பார்க்கவும், கேட்கவும் செய்யுங்கள். எல்லாச் சிறப்பும் தேடி வரும்.
-சிவானந்தர்