ADDED : ஜூலை 20, 2016 09:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* தன்னம்பிக்கை இருந்தால் பணிவும் அவசியம் இருக்க வேண்டும். இரண்டையும் இணைத்து வளர்த்துக் கொள்ளுங்கள்.
* அன்றாடம் தியானப்பயிற்சியில் ஈடுபடுங்கள். மனம் துாய்மை பெறுவதோடு விழிப்பு நிலையிலும் இருக்கும்.
* நன்றி உணர்வு மிக்கவர்கள் மற்றவர்களைக் குறை சொல்ல விரும்ப மாட்டார்கள்.
* வழிபடுதல் என்பது ஒரு பயிற்சி அல்ல. அது இருதயத்தின் ஆழத்தில் இருந்து தானாக வெளிப்பட வேண்டும்.
- ரவிசங்கர்ஜி