தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/மீண்டும் திரும்பி வரும்

மீண்டும் திரும்பி வரும்

மீண்டும் திரும்பி வரும்


ADDED : டிச 01, 2013 10:12 AM

Google News

ADDED : டிச 01, 2013 10:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நமது வாழ்க்கை சிறந்ததாகவும், தூய்மையானதாகவும் இருந்தால் மட்டுமே உலகமும் சிறப்புடையதாக இருக்கும்.

* அறியாமையுடன் வாழ்வதைக் காட்டிலும், போரில் ஈடுபடும் வீரனைப் போல போராடி மாய்வதே மேலானது.

* உண்மை எங்கே இழுத்துச் சென்றாலும், அதைப் பின்பற்றுங்கள். நேர்மையின் பாதையில் செல்லுங்கள். கோழையாகவும், வேடதாரியாகவும் இருக்காதீர்கள்.

* கொடுக்கும் சக்தி உங்களிடம் உள்ள வரையில் கொடுங்கள். அது ஆயிரம் மடங்காகப் பெருகி உங்களிடமே மீண்டும் வரும்.

* எல்லாவற்றையும் செவி சாய்த்துக் கேளுங்கள். உங்களுக்கு எது நல்லதென்று படுகிறதோ, அதை உறுதியாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்.

* தன்னை அடக்கிப் பழகிக் கொண்டவன் வேறு எதற்கும் வசப்பட மாட்டான். அத்தகையவனே உலகில் நன்றாக வாழத் தகுதி படைத்தவன்.

- விவேகானந்தர்



Trending





      Dinamalar
      Follow us