
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* காற்றுள்ள போதே துாற்றிக் கொள்ள வேண்டும். அதுபோல, இளமைக் காலமே உழைப்பதற்கு ஏற்ற காலம்.
* துன்பம் கற்சுவர் போல, நம்மைச் சூழ்ந்து நின்றாலும் அதைப் பிளந்து விட்டு முன்னேறும் சக்தி ஒழுக்கத்திற்கு உண்டு.
* செல்வ நிலையில் பணிவும், வறுமையுற்ற காலத்தில் துணிவும் மனிதனுக்கு அவசியம்.
* நரகமே கிடைத்தாலும் பரவாயில்லை சத்தியத்தை கைவிடத் துணிந்து விடாதீர்கள்.
* கிடைக்கும் பயனை அளந்து பார்க்கும் நண்பன் திருடனுக்குச் சமமானவன்.
- விவேகானந்தர்