
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாந்தோப்பு ஒன்றுக்கு காவல்காரர் தேவைப்பட்டார். ஒருமுறை இப்ராகிம் என்ற ஞானி தெருவில் சென்றார். அவரை இன்னார் என மாந்தோப்புக்காரருக்குத் தெரியாது. ஞானியின் தோற்றத்தைக் கண்டு, 'என் தோப்புக்கு வேலைக்கு வருகிறாயா' எனக் கேட்டார்.
'இதுவும் இறைவன் விருப்பம்' எனக் கருதி ஏற்றார். ஒருநாள் தோட்டக்காரரைக் காண அவரது நண்பர்கள் வந்தனர். அவர்களுக்கு பழம் பறித்து தரச் சொன்னார். ஆனால் இப்ராகிம் பறித்து கொடுத்த பழங்களைச் சாப்பிட்ட நண்பர்கள், புளிக்கிறது என முகம் சுளித்தனர்.
“எந்த மரத்தின் பழம் இனிக்கும் என்று கூடத் தெரியாதா?” என கோபித்தார் தோட்டக்காரர்.
“காவல் பணியைத் தான் ஒப்படைத்தீர்கள். பழங்களை சாப்பிட அனுமதி தரவில்லையே...'' என்றார். இப்ராகிமின் நேர்மையைக் கண்ட அனைவரும் வியந்தனர்.