நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமன் தலைநகரான மஸ்கட்டிற்குச் சென்றார் இந்திய ஜனாதிபதி. விமான நிலையத்தில் அவரை வரவேற்ற மன்னர் சாயித் அல் சாயித் தன் காரில் தானே ஓட்டிச் சென்றார். இதைக் கண்ட ஊழியர்கள், 'மன்னர் இப்படி இறங்கலாமா...'' என வருந்தினர். அவர்களிடம், 'வந்திருப்பவர் ஒரு நாட்டின் ஜனாதிபதியாக இருந்தால் உங்களில் ஒருவரை கார் ஓட்டச் சொல்லி இருப்பேன்.
இந்திய நாட்டில் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள கல்லுாரியில் எனக்கு பேராசிரியராக இருந்தவர் அவர். அவருக்கு கார் ஓட்டியது என் பாக்கியம். மன்னராக செல்லவில்லை. ஒரு மாணவனாகச் சென்றேன்' என்றார். அந்த ஜனாதிபதி யார் தெரியுமா... அவர் சங்கர் தயாள் சர்மா.