நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒரு பயணத்தில் நாயகத்துடன் நான் சென்றிருந்தேன். 'முன்னே செல்லுங்கள்' என தோழர்களை அனுப்பி விட்டு, 'வா! நாம் ஓட்டப்பந்தயம் செல்வோம்' என்றார். அப்போது நான் மெலிந்திருந்த காரணத்தால் சம்மதித்தேன். இருவரும் ஓடியதில் அவரை முந்தினேன். அப்போது அமைதியாக இருந்தார். பின்னாளில் இந்த நிகழ்ச்சியை மறந்துவிட்டேன். நாட்கள் சென்றன.
நாளடைவில் என் உடம்பு பருத்து விட்டது. ஒருநாள் வெளியூர் சென்ற போது, முன்பு போல ஓட்டப்பந்தயம் சென்றோம். என்னை முந்திச் சென்ற அவர் சிரித்தபடியே, 'அன்று உன்னிடம் தோற்றேன். இன்று அதை ஈடுகட்டி விட்டேன்' என்றார்.
இதன் மூலம் அவரின் நகைச்சுவை குணம் வெளிப்படுகிறது என்கிறார் மனைவி ஆயிஷா.