நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பணியாட்களுடன் மெக்காவிற்கு ஒட்டகத்தில் சென்றார் ஒரு பணக்காரர். பாலைவனமான அந்த வழியில் குறுக்கிட்ட ஏழை ஒருவரிடம், 'எங்கே செல்கிறீர்கள்' எனக் கேட்டார். அவரும் மெக்காவிற்கு செல்வதாகக் கூறினார்.
''ஒட்டகத்தில் செல்லும் நாங்கள் மெக்காவை அடைவது உறுதி. நடந்து செல்லும் நீர் எப்படி பாலைவனத்தை கடப்பீர்'' எனக் கிண்டலாக கேட்டார்.
'' என் நோக்கம் மெக்காவிற்கு செல்வது. அதற்கு இறைவன் கருணை புரிவான்'' என நம்பிக்கையுடன் பதிலளித்தார். ஏதோ உளறுகிறார் என நினைத்துக் கொண்டார் பணக்காரர். சிறிது நேரத்தில் பாலைவனத்தின் சூடு தாங்காமல் பணக்காரர் ஒட்டகத்தில் இருந்து கீழே விழுந்தார்.
யாரையும் ஏளனம் செய்யவோ, குறைவாக மதிப்பிடவோ கூடாது.