நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இரவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தான் ஜமால். அடைமழை. ஓய்ந்த பாடில்லை. அருகில் இருந்த வீட்டிற்குள் நுழைந்து, ''ஐயா! மழை நிக்குற மாதிரி தெரியலை. இன்றிரவு இங்கு நான் துாங்கலாமா..'' எனக் கேட்டான்.
வீட்டுக்காரரும் சம்மதித்தார். துாங்கும் முன் தன் பணத்தை தலையணைக்கு கீழே வைத்ததை வீட்டுக்காரர் பார்த்தார்.
ஜமால் துாங்கியதும் பணத்தை எடுக்க முயன்றார். ஆனால் முடியவில்லை. காலையில் எழுந்ததும் ஜமால் பணம் எண்ணுவதை வீட்டுக்காரர் பார்த்தார்.
''தம்பி... ஏதாவது வித்தை தெரியுமா உனக்கு'' என்றார். ''ஓ... அதுவா சார்... உங்கள் தலையணைக்கு கீழே பணத்தை வைத்தேன்'' எனச் சிரித்தான். புத்திசாலியாக இருந்தால் எதையும் சமாளிக்கலாம்.