
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இளைஞன் அப்துல் அனைவரிடமும் அடிக்கடி சண்டையில் ஈடுபட்டான். அதனால் அவனை பலரும் திட்டினர். அவனது அம்மா அஸ்மா வருந்தினாள். சாப்பிட உட்கார்ந்த போது, ''ஏம்மா... அமைதியா இருக்க... உடம்பு சரியில்லையா'' எனக் கேட்டான்.
''உன்னை நினைச்சா தான் கவலையா இருக்கு. உன் வயசு பசங்க எல்லாம் எப்படி ஒழுக்கமா இருக்காங்க. ஆனா நீ மட்டும் இப்படி என்னை படுத்துறியே'' என அழுதாள்.
''சரிம்மா. அழாதே. இனி அப்படி நடக்க மாட்டேன்'' என வாக்கு கொடுத்தான்.
''நான் சொல்வதைக் கேளப்பா... அனைவரையும் அன்புடன் நடத்து, பெரியவர்களை மதித்திடு, மற்றவர் குறையை பெரிதுபடுத்தாதே, கோபத்தை அடக்கு, உறவினரை நேசி, எளிமையாக வாழ்'' என புத்திமதி கூறினாள். திருந்தி வாழ முடிவு செய்தான்.